

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை கொள்ளாநல்லி, ஆட்டுக்காரன்புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் காளிங்கரான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.