விபத்தில் மீன் வியாபாரி பலி

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மீன் வியாபாரி பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள கம்புளியம்பட்டி, காசிபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). மீன் வியாபாரியான இவர் தனது உறவினர் சுஜீத் என்பவருடன் சம்பவத்தன்று இரவு மீன் வியாபாரத்திற்கு ஐஸ் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்று விட்டு 2 பேரும் மீண்டும் சென்னிமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சுஜீத் ஓட்ட இளங்கோ பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது சிப்காட் 3-வது கிராஸ் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் இளங்கோவுக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சுஜீத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com