மதுபோதையில் பள்ளத்தில் விழுந்து கட்டிட காண்டிராக்டர் சாவு

பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் பள்ளத்தில் விழுந்து கட்டிட காண்டிராக்டர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் சொட்டையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). கட்டிட காண்டராக்டர். இவரது மனைவி கடந்த 7 வருடங்களாக மலேசி யாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 மகன்களையும் மனைவியின் பெற்றோர் பராமரித்து வருகின்றனர்.

மோகன்ராஜ் தனது தாயார் நல்லம்மாளுடன் வசித்து வந்தார். கடந்த 10 வருடங்களாக மதுவுக்கு அடிமையான மோகன்ராஜ் தினமும் குடித்து விட்டு ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில் நல்லம்மாள் சம்பவத்தன்று சொட்டையூர் கோவிலில் மோகன்ராஜை பார்த்துள்ளார்.

அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் சொட்டையூரை சேர்ந்த நபர் ஒருவர் வெங்கம்பூர் குரங்கன் பள்ளம் அருகில் உள்ள பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக நல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நல்லம்மாள் தனது உறவினர்களுடன் சென்று பார்த்துள்ளார். அப்போது வழக்கம்போல, பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி விழுந்து மோகன்ராஜ் இறந்தது தெரியவந்தது.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com