பணம் வைத்து சூதாடிய 8 வாலிபர்கள் கைது

சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 8 வாலிபர்கள் கைது
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி கூகலூர் மண்ணுவகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் கோபி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கூகலூர் ராமன் வீதியை சேர்ந்த முருகேஷ் (25), அதேபகுதியை சேர்ந்த குமார் (26), முத்துக்குமார்(25), சசி (25), மூர்த்தி(27), ஆனந்தன்(31), திருமூர்த்தி (24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டினை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com