பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com