போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது

போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் விற்ற 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு வடக்கு, கொடுமுடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோபி அரசு மருத்துவமனை, சேந்தம்பா ளையம் நேரு வீதி, அசோக புரம், கொடுமுடி பனப்பாளையத்தார் வீதி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் பரமசிவம் (வயது 74),

பவானி சேந்தம்பாளையம் நேரு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (63), ஈரோடு வீரப்பன் சத்திரம் அசோகபுரத்தைச் சேர்ந்த ராமசாமி (70),

கொடுமுடி வெங்கம்பூர் வடக்கு புதுப்பாளையம் பழனியப்ப செட்டியார் மகன் பாலகிருஷ்ணன் (63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த பான் மசாலா, கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com