மது விற்ற 4 பேர் கைது

பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற 4 பேர் கைது
Published on

ஈரோடு:

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிலர் அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, பெருந்துறை கருமாண்டிசெல்லி பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (37), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), சத்தியமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (26), பவானி தொட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (44) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com