கஞ்சா விற்ற 3 பேர் கைது

புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, அம்மன் நகர் மாரியம்மன் கோவில் அருகே, புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதை பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (33) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் புளியம்பட்டி, எரங்காட்டு ப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமா ர் (25), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), புளியம்பட்டியைச் சேர்ந்த அன்சர் ஹசன் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com