ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

குளித்து கொண்டிருந்த ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை 2-வது நாளாக தேடும் பணி  தீவிரம்
Published on

சத்தியமங்கலம்:

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவரது தம்பி ஆனந்தராஜ் (25). புஞ்சை புளியம்பட்டி நீலிப்பாளையத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அரசூர் பவானி ஆற்று படித்துறைக்கு துணி துவைப்பதற்காக அருள்ராஜ் சென்றார். அங்கு சிறிது நேரத்தில் அவரது மைத்துனர் ஆனந்தராஜ் குளிக்க வந்தார்.

திடீரென குளித்து கொண்டிருந்த ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

எனினும் ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவி உடன் நேற்று இரவு வரை ஆனந்தராஜை தேடி பார்த்தனர். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் ஆனந்தராஜை தேடி வருகின்றனர். அவரது கதி என்னவென்று தெரியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com