சாராயம் விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.போலீசார் சேகரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சாராயம் விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ராயபாளையம் துண்டுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் வரப்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணியன் மனைவி பூவா என்ற பூவாத்தாள் (53) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சாவகாட்டுப்பாளையம் ராயபாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அந்த நபர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாத்தா னூரை சேர்ந்த சேகர் (59) என்பதும்,

அவரது மொபட்டில் சோதனை செய்தபோது 5 பிளாஸ்டிக் பாட்டில்களில் 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com