சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.
சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட புஞ்சை துறையா ம்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் அவரிடம் அரசு மது பானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ப னை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.

விசார ணையில் அவர் கொ டிய ம்பாளை யத்தை சேர்ந்த ராம சா மி (62) என்ப து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல மொடக்குறிச்சி போலீசார் மேற்கொ ண்ட சோத னையில் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி டாஸ்மாக் அருகில் அரசு மதுபானத்தை சட்டவிரோ தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த மொடக்குறிச்சி, மஞ்சக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த தண்ட பாணி (78) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com