என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மது-போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
  X

  மது-போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்ட பகுதி களில் அந்தியூர், காஞ்சி கோவில், கருங்கல்பாளையம் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அனுமதியின்றி மது பாட்டி ல்களை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ஸ்ரீனிவாசன் (வயது 43) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  இதைப்போல் வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் பென்னா கரத்தைச் சேர்ந்த மனோ கரன் மகன் சுதாகர் (32) என்பவரை காஞ்சிக்கோயில் போலீசார் பிடித்தனர்.

  இதே போல் அந்தியூர்-பர்கூர் சாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்றுக் கொண்டிருந்த அந்தியூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி பேச்சியம்மாள் என்பவரை அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.

  பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×