ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று

7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 124 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com