காட்டுயானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்

அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது. இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.
காட்டுயானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்
Published on

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.

இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com