கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
Published on

கோபி:

கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள கடத்தூர், காசிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது காசிபாளை யம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 பேர் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிங்கிரி பாளையத்தை சேர்ந்த திலீப்குமார் (19), மாக்கணாங் கோம்பை பகுதியை சேர்ந்த விஜய் (21) எனவும், கஞ்சா விற்பனை கொண்டு சென்ற தும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com