பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது

கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com