சூரமங்கலத்தில் சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு

தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிலத்தை அளவிடும் பணி தீவிரம்.
நிலம் அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட காட்சி.
நிலம் அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட காட்சி.
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சி 22-வார்டுக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல பகுதி ஆண்டிபட்டி சுடுகாட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர், அதன் பேரில் நேற்று மாநகராட்சி சர்வேயர் நித்தியா, உதவி பொறியாளர் மலர் ஆகியோருடைய மேற்பார்வையில் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் நில அளவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிகாரிகளுடன் 22 -வது வார்டு கவுன்சிலர் கே. சி. செல்வராஜு மற்றும் பொதுமக்கள் சென்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com