சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில் வந்தது.
சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னை:

சென்னையில் பல கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது.

இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com