கணினி இயக்குபவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com