நிலக்கோட்டை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி - போக்சோ சட்டத்தில் கைது

உறவினரான சிறுமியை மின்வாரிய அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரியை போக்சோ சட்டத்தின் கீழ் செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்தவர் கந்தசாமி(59). இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு கொண்ட உறவினர் சிறுமி தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று இரவு சிறுமியை கந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்தசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவரை கைது செய்து நிலக்கோட்டைமாஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் கந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார். மகள் உறவுகொண்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com