சேலம் அம்மாப்பேட்டையில் சாக்கடை கால்வாயில் எலக்ட்ரீசியன் பிணமாக மீட்பு

ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் அம்மாப்பேட்டையில்  சாக்கடை கால்வாயில்  எலக்ட்ரீசியன் பிணமாக மீட்பு
Published on

சேலம் :

சேலம் அம்மாப்பேட்டையில் ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அம்மாபேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார்?

என்பது குறித்த விசாரித்தபோது, பொன்னம்மாப்பேட்டை சக்தி நகரைச் சேர்ந்த இளங்கோ (வயது 48) என்பது தெரிய வந்தது. எலக்ட்ரீசியனான அவர் குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com