இருள் சூழ்ந்து காணப்படும் பெரியகுளம் பஸ்நிலையம்.

பெரியகுளம் புதிய பஸ்நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் அச்சம் அடைந்-துள்ளனர்.
மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் பெரியகுளம் பஸ்நிலையம்.
மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படும் பெரியகுளம் பஸ்நிலையம்.
Published on

பெரியகுளம்:

பெரியகுளத்தில் புதிய பஸ்நிலையம் 20 ஆண்டு-களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான பஸ்கள் புதிய பஸ்-நிலை-யத்தை புறக்கணித்து விட்டு மெயின் ரோட்டில் உள்ள டெப்போ முன்பு பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் புதிய பஸ்நிலையத்தில் பராமரிப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், மாணவ, மாணவிகள் சென்று வரஅச்சம் அடைந்து வருகின்றனர். இருளை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது.

எனவே இப்பகுதியில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும். கண்-காணிப்பு கேமரா பொருத்தி புறக்காவல் நிலையம் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய-வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com