தாசில்தார் வீட்டின் மின் வயர்கள் திருட்டு

ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தாசில்தார் வீட்டின் மின் வயர்கள் திருட்டு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com