மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

மாதவன் குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர்.
மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி
Published on

சென்னை:

திருவாரூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (23). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை, குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர். அப்போது அவரது பனியன் வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பியில் விழுந்திருந்தது அதை எடுப்பதற்காக மாதவன் 5 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com