கோவையில் கார் மோதி மூதாட்டி பலி

மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு-சேலம் சாலையை கடக்க முயன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் கார் மோதி மூதாட்டி பலி
Published on

கோவை,

கோவை கா.கா. சாவடி அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மரகதம் (வயது 70). சம்பவத்தன்று இவர் மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மரகதம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் கா.கா. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கா.கா. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com