இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

கல்லாவி சாலையில் நடந்து சென்றார். இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியது.
இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அருர் அருகே உள்ள பொண்ணா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 85).விவசாயி. கடந்த 18-ம் தேதி மொரப்பூர்-கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com