தேயிலை தோட்டம் முட்புதரில் முதியவர் சடலமாக மீட்பு

கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேயிலை தோட்டம் முட்புதரில் முதியவர் சடலமாக மீட்பு
Published on

நீலகிரி

கோத்தகிரி அருகே தொட்டனி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது67). கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என செல்வமணி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டனிலிருந்து கனகாம்பை செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்ட முட்புதரில் காணாமல் போன பால்ராஜ் சடலமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com