தேனி அருகே மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Published on

தேனி:

தேனி மாவட்டம் குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிக்சன் அனைவரையும் வரவேற்றார். இதில் தத்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பியூலாராஜினி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைைமஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com