சங்கரன்கோவிலில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகளை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா 
எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகளை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அணி சார்பில் சங்கரன்கோவில் 30-வது வார்டு காவேரி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பயிலும் 120 மாணவ- மாணவியருக்கு மரக்கன்று, கல்வி உபகரணங்கள் அனைத்தும் மஞ்சள் பையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செய லாளர் ராமலிங்கம், முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.இளைஞர் அணி அன்சாரி தொகுத்து வழங்கினார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞரணி சரவணன், நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக் குமார், சுப்புத்தாய், வீரா, ரபிக், ஷெரிப், ஹிதாயத், த.மு.மு.க.வை சேர்ந்த ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அயலக அணி சார்பில் முகமது இஸ்மாயில் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com