இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தில் தசரா தொடக்க விழா

மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர். மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தாம்பூலம் வழங்கினர்.
இலஞ்சி பாரத் கல்வி குழுமத்தில் தசரா தொடக்க விழா
Published on

தென்காசி:

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் தசரா முதல் நாள் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவி ஷைனி பிரித்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி அனுபாமா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் துர்க்கையின் கைகளில் இருக்கும் 10 ஆயுதங்களின் பயன்களை பற்றி மாணவிகள் குழுவாக இணைந்து நடனமாடி, மகிசாசுரனை வதம் செய்த காட்சியினை நடித்து காட்டினர்.

மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியைகளுக்கு பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக ஆலோசகர் உஷா ரமேஷ் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் இணைந்து தாம்பூலம் வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா, பள்ளி முதல்வர்கள் பாலசுந்தர் மற்றும் வனிதா ஆகியோர் செய்திருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com