வெயிலின் தாக்கத்தால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது

தலையணையில் குளிக்க தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டுகிறது.
களக்காடு தலையணையில் குறைந்த அளவே செல்லும் தண்ணீர்.
களக்காடு தலையணையில் குறைந்த அளவே செல்லும் தண்ணீர்.
Published on

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது களக்காடு மலைப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் வெப்பம் நிலவுகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது.

தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டு கிறது. இந்த தண்ணீர் 10 நாட்களில் முழுவதும் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிவார்கள். இந்தாண்டு அடுத்த மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில் தலையணையில் தண்ணீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com