திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை

திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.
திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com