போதையில் ஆற்றில் விழுந்தவர் பரிதாப சாவு

மதுகுடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(40). ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்.

சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் வீரபாண்டி கன்னீஸ்உடையார் கோவில் அருகே மதுகுடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஆதிலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com