ஒட்டன்சத்திரத்தில் ரெயிலில் அடிபட்டு இசைக்கலைஞர் பலி

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். ஒட்டன்சத்திரத்திரம் திரும்பிய அவர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
ரெயிலில் அடிபட்டு இறந்த ஆனந்த்.
ரெயிலில் அடிபட்டு இறந்த ஆனந்த்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்த் (வயது 21). இவர் இசைக்கலைஞராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பெங்களூரில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊர் திருவிழாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் வந்தார். நேற்று இரவு பஸ்நிலையம் பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரெயில் இவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் இதைப் பார்த்து ஒட்டன்சத்திரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com