தஞ்சையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாணவ -மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், உதவி ஆணையர் (கலால் ) பழனிவேல், கோட்ட கலால் அலுவலர்கள் தங்க பிரபாகரன், அருணகிரி, தாசில்தார் சக்திவேல், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com