அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Published on

மதுக்கூர்:

மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், இழப்புகள் குறித்து மதுக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் பாலக்குமார், கோவிந்தராஜ், ஆசிரியர் தேவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com