குஞ்சப்பனையில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது.
குஞ்சப்பனையில் பொதுமக்களுக்கு போதைப்பொருள்  குறித்த விழிப்புணர்வு
Published on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் குஞ்சப்பனை பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com