குடிபோதையில் டிரைவரை கொன்ற வாலிபர்

பெரியகுளத்தில் குடிபோதையில் டிரைவரை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட போத்திராஜன்.
கொலை செய்யப்பட்ட போத்திராஜன்.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் போத்திராஜன் (வயது 37). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று வடுகபட்டி பைபாஸ் சாலையில் பெரியபாலம் அருகில் நின்று மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசார ணையில் போத்திராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவருடன் சேர்ந்து மதுக்குடித்த தாமரைக்குளம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த வீரமுத்து (35) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் போத்திராஜனை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். குடிபோதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது போத்திராஜனை வீரமுத்து கீழே தள்ளிவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இதில படுகாயமடைந்த போத்திராஜன் உயிரிழந்தார். இதனையடுத்து வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com