சேத்தியாத்தோப்பு அருகே சாலை விபத்தில் டிரைவருக்கு எலும்பு முறிவு

வாலைக்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார்108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே சாலை விபத்தில் டிரைவருக்கு எலும்பு முறிவு
Published on: 

கடலூர்:

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையான்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). பால் வண்டி டிரைவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஜோதி (40) என்பவருடன் வீராணம் ஏரியில் மீன்பிடிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது வாலை க்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார். இதில் பாலமுருகனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜோதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com