பாளையில் பணம் வராததால் ஏ.டி.எம். அறை கண்ணாடியை உடைத்த டிரைவர் - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளதுபணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.
பாளையில் பணம் வராததால் ஏ.டி.எம். அறை கண்ணாடியை உடைத்த டிரைவர் - சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை
Published on

நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது.

கண்ணாடி உடைப்பு

சம்பவத்தன்று இரவு அங்கு பணம் எடுப்பதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏ.டி.எம்.மில் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அந்த அறையின் கதவு கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மறுநாள் காலை வங்கி பணிக்கு வந்தவர்கள் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சி.சி.டி.வி. ஆய்வு

உடனே பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். அறையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவாகியிருந்த அந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் வண்ணார்பேட்டை வெற்றிவேல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 45) என்பதும், அவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com