அனைவருக்கும் குடிநீர் திட்டபணிகள் தொடக்கம்

ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன. அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.
அனைவருக்கும் குடிநீர் திட்டம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
அனைவருக்கும் குடிநீர் திட்டம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

ஏற்காடு:

ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோவில்மேடு பகுதிக்கு அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ரவிசந்திரன். பஞ்சாயத்து துணைதலைவர் பட்டாசு பாலு, கோவில்மேடு வார்டு உறுப்பினர் பிரீத்தா கலை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில்மேடு பகுதியை தொடர்ந்து லாங்கில்பேட்டை, டவுன், அழகாபுரம்.ஜெரினாக்காடு ஆகிய பகுதிகளுக்கு இந்ததிட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com