நாமகிரிப்பேட்டையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை

நாமகிரிப்பேட்டையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆலோசனை நடத்திய காட்சி.
அதிகாரிகள் ஆலோசனை நடத்திய காட்சி.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செய்ய பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் திட்ட உதவி பொறியாளர் ஆகியோருடன் பேரூராட்சி தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை உயர்த்தி வழங்க கோரியும், குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com