அறிவில்லையா உனக்கு.... செய்தியாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்

பத்திரிகையாளருக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம்.சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.
அறிவில்லையா உனக்கு.... செய்தியாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்
Published on

தேனி:

தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர்.

ஆனால் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் அவர் அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். இருந்த போதும் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com