புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக பணியாற்றும் வகையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர்.
புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  நிரந்தரமாக பணியாற்றும் வகையில்  டாக்டர்களை நியமிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
Published on

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தட்டப்பாறை ரோட்டில் உள்ளது. இங்கு ஒரு பெண் மருத்துவர், ஒரு ஆண் மருத்துவர் என 2 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர்.

பிரசவம்

இவர்கள் நோயாளிகளை பரிவுடன் கவனித்து வந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்து சென்றனர். பிரசவம் பார்க்கவும் ஏராளமான பெண்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்தனர்.

இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் மேற்படிப்புக்கு சென்று விட்டனர். இதனால் ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.

தற்போது ஒரு வாரமாக அவரும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களை 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். 3 மாதமாக இந்த மருத்துவமனையில் எவ்வித பிரசவமும் பார்க்கப்பட வில்லை. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

எனவே உடனடியாக தினமும் பணிபுரியும் படியாக நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com