தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசிய போது எடுத்த படம்.
மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசிய போது எடுத்த படம்.
Published on

காரிமங்கலம்,

தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களிடம் தங்களது வாக்காளர் பட்டியலில் இறப்பு சேர்த்தல், நீக்கல் குறித்து பல்வேறு விவரங்களை தெளிவாக எடுத்துக் கூறினார்.

மேலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எப்படி பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், மணி மாநில செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர்.மனோகரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு சூடுபட்டி சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் குமரவேல், ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் சண்முகம், சித்ரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com