கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. நிர்வாகி போராட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. நிர்வாகி போராட்டம்
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஒருவர் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ்அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. இவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இவர் அதே ஊரில் வசிப்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக இதுவரை ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் வழங்கிய பின்பும், மீதம் ரூ.20 ஆயிரம் தரவேண்டுமென நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடன் கொடுத்தவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு வந்த போலீசார், சிவகுரு மற்றும் அவரது மனைவியை மிரட்டி பணம் கொடுக்க வலியுறுத்தினர். எனவே, கடன் கொடுத்த நபர் மீதும், வீட்டிற்கு வந்து மிரட்டிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவகுரு கூறினார். கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென தி.மு.க. பிரமுகர் சிவகுருவிற்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com