மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: சிவசைலநாத பள்ளி மாணவி முதலிடம்

தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது. இப்போட்டியில் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.
மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: சிவசைலநாத பள்ளி மாணவி முதலிடம்
Published on

செங்கோட்டை:

தென்காசி ஐ.சி.ஐ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி கடந்த 10-ந்தேதி நடந்தது. இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி பாலமுகனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் பெற்றார்.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியா் சுதாநந்தினி பள்ளியின் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற மாணவியையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியா் பிரபாகரன், அதற்கு உறுதுணையாக இருந்த லதா ஆகியோரை பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், பள்ளிச்செயலா் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினா் மணிகண்டன், ஆசிரியா்-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com