பாளை அண்ணா மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள்- நாளை தொடக்கம்

பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது.இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.
பாளை அண்ணா மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள்- நாளை தொடக்கம்
Published on

நெல்லை:

பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.

இந்த போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு முதல் 2 நிலைகளை பெறுகின்ற அணிகளுக்கு கருவேலம் வெற்றிக் கோப்பைகளும், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் முருகேசன், பீர்அலி, டாக்டர் மாரிக்கண்ணன், சார்லஸ், ஜாண்சன், ராதா, மோகன், முனைவர் ஹமர் நிஷா,மங்கை,ஜெயா மற்றும் சிந்தா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com