பா.ஜனதா சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்ட காட்சி. 
துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்ட காட்சி. 
Published on

வள்ளியூர்:

மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பெருமணல் மாதா கோவில் அருட்தந்தை ஜூலியனிடம் 9-ஆண்டு கால சாதனை களை விளக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு கொடுத்து இனி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ், நெல்லை தெற்கு மாவட்ட பொது செயலாளர்கள் பாபு தாஸ் மற்றும் அருள் காத்தி, நெல்லை தெற்கு மாவட்ட பொரு ளாளர் பால கிரு ஷ்ணன், சிறுபான்மை அணி தெற்கு மாவட்ட பொது செயலாளர் எடிசன், வள்ளியூர் மத்திய ஒன்றிய தலைவர் அருள் ஜெக ரூபர்ட், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக், சிறுபான்மை அணி ராதாபுரம் தெற்கு ஒன்றியதலைவர் சந்தியாகு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com