செங்கோட்டையில் நெல் விதை மானியத்தில் விநியோகம்

செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.
செங்கோட்டையில் நெல் விதை மானியத்தில் விநியோகம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டாரத்தி ல் வரும் கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். நெல் சாகுபடி செய்யும் வேளாண் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சான்று பெற்ற நெல் விதைகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கார் நெல் சாகுபடிக்காக செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு இந்த ஆண்டும் நெல் விதைகளை மானியத்தில் வழங்கலாம் என உத்தர விட்டுள்ளதன்படி, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் துணை இயக்குனர் ஊமத்துரை மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதுபற்றி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறுகையில், செங்கோட்டை வட்டாரம் புளியரை, தெற்குமேடு, புதூர், கற்குடி, செங்கோட்டை மேலூர், கீழூர், டவுன், சீவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும், மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோ ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்று விதை நேர்த்தி செய்தல் நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கலாம் என கூறியுள்ளார்.

நெல் விதை விநியோகத்தி ற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார் , அருணாசலம், முகமது ஜலால் மைதீன் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com